தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோயம்பேட்டில் தக்காளி வாகனங்களை நிறுத்த நிரந்தர இடம் ஒதுக்க முடியாது! - தக்காளி ஏற்றிவரும் வாகனங்களை நிறுத்துவதற்கு நிரந்தரமாக இடம் ஒதுக்க முடியாது

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளி ஏற்றிவரும் வாகனங்களை நிறுத்துவதற்கு நிரந்தரமாக இடம் ஒதுக்க முடியாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

By

Published : Feb 3, 2022, 3:10 PM IST

சென்னை:கோயம்பேடு தக்காளி மைதானத்தை திறக்கக்கோரி தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ”அரசு தரப்பில் வாகனங்களை நிறுத்தக்கூடிய இடத்தில் சிறுகடைகளின் உரிமையாளர்கள் விற்பனை செய்ததால் மைதானம் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் மார்க்கெட் கமிட்டில் சார்பில் 800 வாகனங்களை நிறுத்தும் அளவிற்கு வசதிகள் அமைக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கரோனா பரவல் மற்றும் தக்காளி விலை உயர்வை கருத்தில் கொண்டு தான் தக்காளி ஏற்றி வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு தற்காலிகமாக இடம் ஒதுக்கப்பட்டதாகவும், தற்போது இயல்பு நிலை திரும்புவதால் தக்காளி ஏற்றி வரும் வாகனங்களை நிறுத்துவதற்கென நிரந்தரமாக இடம் ஒதுக்கமுடியாது என உத்தரவிட்டார்.

மேலும், சட்ட விரோதமாக வாகனங்களை நிறுத்தினால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க:அண்ணாவின் 53ஆவது நினைவு நாள்: ஸ்டாலின் மரியாதை

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details