இது குறித்து சென்னை பல்கலைக்கழக பதிவாளர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, “டாக்டர் எம்ஜிஆர் நூற்றாண்டு சமூக முன்னேற்ற மையத்திற்குச் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரைத் தலைமையாகக் கொண்டு ஐந்து உறுப்பினர்கள் அடங்கிய ஆலோசனைக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலர்கள் சாந்தா ஷீலா நாயர், மணிவண்ணன், பல்கலைக்கழக பொருளியல் துறைத் தலைவர் ஜோதி சிவஞானம், பல்கலைக்கழக இந்திய வரலாற்றுத் துறைத் தலைவர் சுந்தரம், பல்கலைக்கழகப் பதிவாளர் அடங்கிய ஆலோசனைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவிற்கு கடந்த மாதம் 9ஆம் தேதி நடைபெற்ற பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தில் உத்தரவு நகல் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதன் ஒருபகுதியாக, எம்ஜிஆர் பெயரில் சமூக முன்னேற்றத்திற்கான மையம் ஐந்து கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மையம் கல்வி, சுகாதாரம், பெண்கள் முன்னேற்றம் மதிய உணவுத் திட்டம் என்று எம்ஜிஆர் நிகழ்த்திய சோதனைகளை மாணவர்களுக்குக் கற்பிக்கும் வகையில் செயல்படும். சமூக முன்னேற்றம் அடங்கலான எம்ஜிஆர் முகத்தை இந்தக் குழுவினர் வழி நடத்துவார்கள்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.