தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பட்ஜெட்: 100 நாள் வேலை திட்டம் 150 நாள்களாக உயர்வு

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில், 100 நாள் வேலை திட்டம் 150 நாள்களாக உயர்த்தப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

mgnrega working days
mgnrega working days

By

Published : Aug 13, 2021, 1:03 PM IST

Updated : Aug 13, 2021, 1:15 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்குப் பின், இன்று (ஆகஸ்ட். 13) சட்டப் பேரவையில், 2021-22 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை, தாக்கல் செய்யப்பட்டுவருகிறது. இதனை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார். அதில், 100 நாள் வேலை திட்டம் 150 நாள்களாக உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்.

100 நாள் வேலை திட்டம் 150 நாள்களாக உயர்வு

இதுகுறித்து நிதியமைச்சர், "தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் வேலை நாள்கள் 100 நாள்களிலிருந்து 150 நாள்களாக உயர்த்தப்படும். அத்துடன் தினசரி ஊதியம் ரூ.273-யிலிருந்து ரூ.300ஆக உயர்த்தப்படும்.

மேலும் 1,622 கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும். அதற்காக ரூ.400 கோடியில் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்படும். கிராமப்புறங்களில் 1.27 கோடி குடும்பங்களுக்கும் வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும். " எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: வேலை நாள்கள் அதிகரிப்பு!

Last Updated : Aug 13, 2021, 1:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details