நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில், அதன் இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ” கடந்த 3 மாதங்களாக தென்னிந்தியப் பகுதிகளில் நிலவிய வடகிழக்கு பருவமழை பெரும்பாலும் குறைந்துவிட்டதால், அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை முற்றிலும் நிறைவுபெறும். வடகிழக்கு பருவமழைக் காலத்தில் தமிழகத்தில் இயல்பைவிட 2 விழுக்காடு அதிக மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. அதில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 64 விழுக்காடும், ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் 45 விழுக்காடும், தூத்துக்குடியில் 31 விழுக்காடும், கோவையில் 29 விழுக்காடும், புதுக்கோட்டையில் 27 விழுக்காடும் பதிவாகியுள்ளன.
24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவு! - வானிலை ஆய்வு மையம்
சென்னை: தென்னிந்தியாவில் பெரும்பாலும் மழை குறைந்துவிட்டதால், அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை முற்றிலும் நிறைவுபெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
end
மேலும், மதுரை, பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் புதுவை ஆகிய பகுதிகளில் சராசரியாக 24 விழுக்காடு குறைவாக மழை பதிவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும். காலை நேரங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் பனிப்பொழிவு நிலவும் “ எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: புதிய வருடத்தின் முதல் பனிப்பொழிவு - காண்போரை கவரும் சிக்கிம்!