சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சேவை ’பீக் ஹார்’ எனப்படும் உச்சபட்ச நேர சேவை இன்று (பிப். 25) ஒருநாள் மட்டும் அதிகரிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இன்று மெட்ரோ ரயில் சேவை அதிகரிப்பு!
சென்னை மெட்ரோ ரயில் சேவை ’பீக் ஹார்’ எனப்படும் உச்சபட்ச நேர சேவை இன்று ஒரு நாள் மட்டும் அதிகரிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Metro service timing has been extended
அதன்படி காலை 7 மணி முதல் 11 மணி வரையும் மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் ஐந்து நிமிட இடைவெளிக்கு ஒரு ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகரப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதிசெய்யப்படாததால், இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Feb 25, 2021, 6:24 AM IST