தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

16ஆம் தேதி புயல்! - வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், வரும் 16ஆம் தேதி புயல் உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

cyclone
cyclone

By

Published : May 13, 2020, 4:04 PM IST

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேலும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது வரும் 15ஆம் தேதி மேலும் வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மத்திய வங்கக் கடல் பகுதியில் மையம் கொள்ளும். அதனைத் தொடர்ந்து 16ஆம் தேதி புயலாக மாற்றம் பெறக்கூடும்.

16 ஆம் தேதி புயல்! - வானிலை ஆய்வு மையம் தகவல்

இதன் காரணமாக வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் 15, 16, 17 ஆகிய தேதிகளில் 75 கிலோ மீட்டர் வேகம் வரை சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் 30 தீயணைப்பு வீரர்களுக்கு கரோனா பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details