சென்னை:புரசைவாக்கம் தானா தெருவில் சனிக்கிழமை இரவு வயதான நபர் ஒருவர் தலை மற்றும் முகம் முழுவதும் பெயிண்டை ஊற்றிக் கொண்டு அட்டகாசம் செய்து கொண்டிருந்தார்.
இதனைக் கண்ட பொதுமக்கள் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற வேப்பேரி போக்குவரத்து ஆய்வாளர் பாண்டி வேலு அந்த நபரை பிடித்து விசாரணை செய்தார். அப்போது, தன் பெயர் கருணாகரன் என்றும் புரசைவாக்கம் ராஜ்பவன் ஹோட்டல் பின்புறம் உள்ள கரும்பு தோட்டம் ஹவுசிங் போர்டில் வசித்து வந்ததாகவும் தெரிவித்தார். தற்போது தன்னை என் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே விரட்டி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பெயிண்ட் ஊற்றிக் கொண்டு பொதுமக்களை அச்சுறுத்திய முதியவர் இதையடுத்து போக்குவரத்து ஆய்வாளர் அந்த நபரை சமாதானப்படுத்தி முடி வெட்டும் நபரை அழைத்து பெயிண்டால் சிக்கிக்கொண்ட தலைமுடியை முழுவதுமாக மொட்டை அடித்தார். பின்னர் குளிக்க வைத்து புதிய துணிகளை வாங்கி உடுத்தியுள்ளார். கருணாகரனை அவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவரின் மனைவி மற்றும் மகன்களிடம் மனம் நல பாதிக்கப்பட்ட பெற்றோரை நாம் தான் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
இது போன்று வீட்டை விட்டு விரட்டி விட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து, வீட்டில் பத்திரமாக கருணாகரனை ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார். இந்த சம்பவத்தால் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டி வேலுவை பொதுமக்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.
இதையும் படிங்க:செய்தியாளரை மிரட்டிய அடையார் ஆனந்த பவன் மேலாளர் உட்பட மூவர் கைது