சென்னை தலைமைச்செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முன்னிலையில் சென்னை பல்கலைக்கழகம் மெல்போர்ன் பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களிலும் தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வி கற்கும் வகையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.