தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு ஒரே நாளில் ஏலம் - மெகா ஏலம்

சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள 117 வணிக வளாக கடைகளுக்கு வரும் அக்டோபர் 12ஆம் தேதி ஒரே நாளில் மெகா ஏலம் விடப்படவுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு ஒரே நாளில் மெகா ஏலம்
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு ஒரே நாளில் மெகா ஏலம்

By

Published : Aug 30, 2022, 10:13 PM IST

சென்னை: சென்னை மாநகராட்சியின் 117 கடைகளுக்கும் ஒரே நாளில் வருகின்ற அக்டோபர் 12ஆம் தேதி மெகா ஏலம் ( mega auction) விட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களிலும் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்கள் உள்ளன. இதில் நீண்ட காலமாக உரிய தொகை செலுத்தாமல் உள்ளவர்களின் கடைகளுக்கு மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு காரணங்களால் மொத்தம் உள்ள 4,679 கடைகளில் 117 கடைகள் காலியாக உள்ளன.‌‌

மாநகராட்சியின் சொந்த வரி வருவாயை பெருக்கும் வகையில் இந்த கடைகள் ஏலம் விடப்படவுள்ளது. கடைகள் காலியாக உள்ள அந்தந்த மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் ஏலம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் வணிக வளாக கடைகள் அமைந்திருக்க கூடிய பகுதி கடையின் பரப்பளவு ஒரு சதுர அடியில் வாடகை மதிப்பு என்பதன் அடிப்படையில் கடை வாடகை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் தற்பொழுது காலியாக உள்ள கடைகளில் 4,425 ரூபாய் முதல் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வரையிலுமான வாடகை கடைகள் காலியாக உள்ளன.

ஒன்பது ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்படும், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை 15 சதவீதம் வாடகை அதிகரிக்கும் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கடை வேண்டுமென்றால் அவர்களே குத்தகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சென்னை மாநகராட்சி மாமன்றக்கூட்டத்தில் 61 தீர்மானங்கள் நிறைவேற்றம்

ABOUT THE AUTHOR

...view details