இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் சண்முகம் இன்று (டிச.17) வெளியிட்டுள்ள அறிவிப்பில்,“ ஏற்கெனவே உள்ளரங்கு கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி, திறந்தவெளியின் அளவிற்கேற்ப (Total Capacity) சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அதிகபட்சம் 50 % அளவிற்கு மிகாமல் (50% of maximum capacity) பங்கேற்பாளர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், விளையாட்டு, கல்வி, பண்பாடு, பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் டிச.19ஆம் தேதி முதல் நடத்த அனுமதிக்கப்படுகிறது.
டிச.19ஆம் தேதி முதல் திறந்த வெளிகளில் கூட்டங்கள் நடத்த அனுமதி - Relaxation in curfew order
சென்னை: திறந்த வெளிகளில் அரசியல், விளையாட்டு, கல்வி, பண்பாடு, பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதியளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
திறந்த வெளிகளில் கூட்டங்கள் நடத்த அனுமதியளிக்கு அரசணையை வெளியிட்ட தமிழ்நாடு அரசு
இக்கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடமும், சென்னை மாநகராட்சியில் காவல்துறை ஆணையர் அவர்களிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :சாலை விரிவாக்கப் பணியால் மரங்கள் அழிப்பு: வேதனையில் மக்கள்!