தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அனைத்துக் கோயில்களும் திறப்பு: மக்கள் மகிழ்ச்சி - கோயில்கள் திறந்ததால் மக்கள் மகிழ்ச்சி

தமிழ்நாட்டில் அனைத்துக் கோயில்களும் வெள்ளிக்கிழமையான இன்று (அக்டோபர் 15) திறக்கப்பட்டதால் மகிழ்ச்சியுடன் பொதுமக்கள் சாமி தரிசனம்செய்தனர்.

வெள்ளிக்கிழமை கோயில் திறப்பு
வெள்ளிக்கிழமை கோயில் திறப்பு

By

Published : Oct 15, 2021, 10:53 AM IST

Updated : Oct 15, 2021, 1:43 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் காரணமாகக் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க கோயில்களில் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் வழக்கம்போல் ஆகமவிதிப்படி நடைபெறும் அதிகாலை பூஜை, உச்சிகால பூஜை உள்ளிட்டவை பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்றுவந்தன.

தமிழ்நாடு அரசு அறிவித்த தளர்வுகளின் அடிப்படையில் வெள்ளி, சனி, ஞாயிறு தவிர மற்ற நாள்களில் கோயில்களில் பொதுமக்கள் சாமி தரிசனம்செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் பொதுமக்கள், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று இன்றுமுதல் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாள்களிலும் கோயில்களைத் திறக்க அரசு உத்தரவிட்டது. அதனடிப்படையில் வெள்ளிக்கிழமையான இன்று கோயில்களில் பொதுமக்கள் சாமி தரிசனம்செய்ய அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.

கரோனா தொற்றுக்குப் பின்னர் வார இறுதி நாளான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் பொதுமக்கள் அதிக அளவில் சாமி தரிசனம்செய்வது வழக்கம். அந்த அடிப்படையில் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அனைத்துக் கோயில்களிலும் பொதுமக்கள் குடும்பத்துடன் சாமி தரிசனம்செய்தனர்.

அதன்படி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திறக்கப்பட்டு பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வந்து சாமி தரிசனம்செய்தனர்.

இது குறித்து பெண்கள் கூறுகையில், "கரோனா தொற்றுக்குப் பின்னர் வார இறுதி நாள்களில் விடுமுறை என்பதால் அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் சாமி தரிசனம்செய்வது மனத்திற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். மேலும் இந்தக் கரோனா தெரற்று முழுமையாக நீங்கிடவும், உலக அமைதி பெறவும் சாமி தரிசனம் செய்தோம்" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: வார இறுதி நாட்களில் கோயில்கள் திறக்க அரசு அனுமதி - அண்ணாமலை வரவேற்பு

Last Updated : Oct 15, 2021, 1:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details