தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்த 84 பாதுகாப்பு வீரர்களுக்கு கடந்த 23ஆம் தேதி கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த வாரம் ஆளுநர் மாளிகையில் 38 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 35 நபர்களுக்கு நோய் தொற்று இல்லை என்பது உறுதியானது.
ஆளுநர் உதவியாளர் உட்பட 3 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாடு ஆளுநருக்கு மருத்துவ பரிசோதனை! - tamilnadu governer
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை 7 நாள் தனிமைப்படுத்தி இருந்த நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆளுநர் மாளிகையின் மருத்துவ அலுவலர் ஆளுநருக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். அப்பொழுது ஆளுநர் நலமாக இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனாலும் மருத்துவர் ஆளுநரை 7 நாள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார். அதனை ஏற்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னை ஏழு நாள் தனிமைப்படுத்தி கொண்டு இருந்தார்.
இந்தநிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக ஆளுநர் சென்றுள்ளார். அவரை பரிசோதனை செய்த பின்னர் அவரது உடல் நலம் குறித்து அறிவிக்கப்படும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.