தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு? ராதாகிருஷ்ணன் பதில்! - தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தும் சூழ்நிலை இல்லை என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்

தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்துவதற்கும், கட்டுப்பாடுகள் தீவிரபடுத்துவதற்கான சூழ்நிலை தற்போது இல்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தும் சூழ்நிலை இல்லை  மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்
தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தும் சூழ்நிலை இல்லை மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

By

Published : Apr 26, 2022, 7:40 PM IST

சென்னை: கிண்டி கிங்ஸ் கரோனா மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, ”சென்னை ஐஐடியில் தொடர்ந்து நோய் கட்டுப்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஐஐடியில் 79 ஆக இருந்த கரோனா எண்ணிக்கை, மேலும் 32 பேருக்கு நேற்று (ஏப்.25) தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தொற்று எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது. சென்னை ஐஐடியில் மொத்தமுள்ள 7,490 மாணவர்களில் 3,080 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், 111 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. 2 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில் 109 சிகிச்சையில் உள்ளனர். 27 மாவட்டங்களில் கரோனா தொற்று இல்லை. 9 மாவட்டங்களில் ஆங்காங்கே பரவல் உள்ளது. 1 கோடியே 48 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை.

தமிழ்நாட்டில் ஊரடங்கு? ராதாகிருஷ்ணன் பதில்

தகுதியுள்ளவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் கவலை பட வேண்டிய கட்டத்தில் இல்லை எனவும், அக்கறை காட்ட வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். தர்மபுரி, ராணிப்பேட்டை, மதுரை, திருப்பத்தூர், நாமக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் விகிதம் குறைவாக உள்ளது.

தமிழ்நாட்டில் 1000 பேரில் 3 பேருக்கு மட்டுமே தொற்று பதிவாகிறது. கடந்த மார்ச் 2020 ஒப்பிட்டு பார்க்கும் போது பல்வேறு அனுபவங்கள் கிடைத்துள்ளது. பொது இடங்களில் மாஸ்க் அணிவது, தடுப்பூசி செலுத்திக்கொள்வது மட்டும் தான் தற்போது வல்லுநர்கள் கருத்தாக உள்ளது.

ஊரடங்கு அமல் படுத்துவதற்கும் கட்டுப்பாடுகள் தீவிர படுத்துவதற்கான சூழ்நிலை தற்போது தமிழ்நாட்டில் இல்லை. ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். மருத்துவமனைகளில் மின்வெட்டு பிரச்சினை இல்லை என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மருத்துவமனைகளிலும் ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் உள்ளது” எனக் கூறினார்.

இதையும் படிங்க:சென்னை ஐஐடியில் 110 பேருக்கு கரோனா!- ராதாகிருஷ்ணன்ஆய்வு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details