சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இன்று சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, தமிழ்நாட்டின் பல்வேறு கோரிக்கைகளை கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.
மருந்து உற்பத்தி பூங்கா
அதில், திருவள்ளூர் மாவட்டம் குமுடிப்பூண்டி தாலுக்கா அருகேயுள்ள மணலூரில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், 2 ஆயிரத்து 153 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஒரகடம் அருகே 350 ஏக்கர் பரப்பளவில், 430 கோடி ரூபாய் மதிப்பில், மருத்துவ உபகரங்கள் உற்பத்தி செய்யும் பூங்கா அமைக்க திட்டமிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில், பொதுவான உற்பத்தி, சேமிப்பு, குளிர்பதன கிடங்கு, சோதனை மற்றும் ஆராய்ச்சி வசதிகள் இருக்கும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில், முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு அதிக சலுகைகளை வழங்கவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு ஆட்டோமொபைல், மின்னணு சாதனம், பின்னலாடை உள்ளிட்ட துறைகளில் முன்னிலை பெற்றிருந்தாலும் மருந்து உற்பத்தியில் இன்னும் முழு அளவை எட்டவில்லை என்பதால் தற்போது இந்த பூங்கா அமைக்க திட்டமிட்டுள்ளது.