சென்னை: சட்டப்பேரவையில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் மு. பன்னீர்செல்வம், மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்க அரசு முன் வருமா என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் மா சுப்ரமணியன், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், தென்காசி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் எதிர்காலத்தில் படிப்படியாக மருத்துவ கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
அரசின் நிலைப்பாடு
மேலும், மருத்துவக் கல்லூரி அனைத்து மாவட்டங்களிலும் இருக்க வேண்டும் என்பது தான் அரசின் நிலைப்பாடு எனவும் அவர் கூறினார்.
மருத்துவக் கல்லூரி தொடங்க 300 கோடி முதல் 400 கோடி வரை செலவாகும் எனவும், மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறை மாவட்டத்தில் எதிர்காலத்தில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:Temple Advisory Committee: கோயில்களில் வசதிகளை மேம்படுத்த ஸ்டாலின் தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பு