தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

லாரி மோதி மருத்துவக்கல்லூரி மாணவி பலி - பிசியோதெரபி

பூந்தமல்லி அருகே கல்லூரி முடித்துவிட்டு வீட்டிற்குச்செல்லும் வழியில் லாரி மோதி மருத்துவக்கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லாரி மோதி மருத்துவ கல்லூரி மாணவி பலி
லாரி மோதி மருத்துவ கல்லூரி மாணவி பலி

By

Published : Sep 2, 2022, 6:00 PM IST

சென்னை: தூத்துக்குடியைச்சேர்ந்தவர் சுப்பிரமணியன். அரசு மின் வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். தற்போது சென்னை - பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் குடும்பத்துடன் வசித்துவருகிறார். இவரது மகள் சுபிதா(21), வேலப்பன்சாவடியில் உள்ள மருத்துவக்கல்லூரியில் நான்காம் ஆண்டு பிசியோதெரபி படித்து வந்தார்.

இந்நிலையில் இன்று கல்லூரியில் தேர்வுகள் முடிந்த நிலையில், கல்லூரியில் நண்பர்களுடன் விழா கொண்டாடிவிட்டு தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்குச்சென்று கொண்டிருந்தார். அப்போது பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் சர்வீஸ் சாலையில், மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, கடையில் சுபிதா தண்ணீர் பாட்டில் வாங்கியுள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்து செல்ல மோட்டார் சைக்கிளை எடுத்தபோது பின்னால் வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் சுபிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச்சம்பவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்துப்புலனாய்வுப்பிரிவு இன்ஸ்பெக்டர் கவுசல்யா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த மாணவி சுபிதாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் தன்ராஜ்(27), என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பெட்ஷீட்டினை சுற்றி சாக்கடையில் வீசப்பட்டிருந்த ஆண் சடலம்... போலீஸ் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details