தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தலைநகரில் அதிகரித்துவரும் மருத்துவ முகாம்கள்! - சென்னை மருத்துவ முகாம்

சென்னையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மருத்துவ முகாம்களைச் சுகாதாரத் துறை அதிகரித்துவருகிறது. அதன்படி நேற்று (மார்ச் 31) 241 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளதாக மாநகராட்சித் தகவல் வெளியிட்டுள்ளது.

medical camps raised to control corona virus in chennai corporation
medical camps raised to control corona virus in chennai corporation

By

Published : Apr 1, 2021, 6:58 AM IST

சென்னை: 241 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் கரோனா வைரஸ் (தீநுண்மி) மீண்டும் திரு.வி.க. நகர், அண்ணா நகர், அடையாறு போன்ற இடங்களில் அதிகமாகப் பரவிவருகிறது. இருப்பினும் குணமடைந்துவருபவர்களின் விகிதமும் அதற்குச் சரிசமமாக உள்ளது.

இந்த நோய்த் தொற்றை மேலும் குறைப்பதற்காக மாநகராட்சியும், சுகாதாரத் துறையும் தினமும் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்குவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நாள்தோறும் 15 மண்டலங்களிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற்றுவருகின்றன. மே 8ஆம் தேதிமுதல் இன்றுவரை மாநகராட்சி சார்பில் மொத்தம் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 482 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன.

அதில் 56 லட்சத்து 90 ஆயிரத்து 771 நபர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 85 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்துவருகின்றனர். மொத்த மக்கள் தொகையில் 60 விழுக்காட்டிற்கு மேற்பட்ட மக்கள் இந்த மருத்துவ முகாம்கள் மூலம் இதுவரை பரிசோதிக்கப்பட்டு உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று (மார்ச் 31) 241 மருத்துவ முகாம்கள் நடைபெற்றன எனச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக தண்டையார்பேட்டையில் 38, அடையாறில் 34 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன. 241 மருத்துவ முகாம்களில் மொத்தம் 18 ஆயிரத்து 585 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். அதில் 132 நபர்கள் அறிகுறி இருந்ததால் அருகில் உள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மீதமுள்ள நபர்களுக்கு நோய்க்கு ஏற்ற மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details