தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விமானம் ஓடுபாதையில் செல்லும்போது திடீா் இயந்திரக்கோளாறு - விமானியின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்ப்பு! - தாய் ஏா்லைன்ஸ்

சென்னையிலிருந்து தாய்லாந்து செல்லும் தாய் ஏா்லைன்ஸ் விமானம் ஓடுபாதையில் செல்லும்போது அதில் திடீா் இயந்திரக்கோளாறு ஏற்பட்டது.

flight
flight

By

Published : Jun 11, 2022, 6:51 PM IST

சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாங்காக் செல்லும் தாய் ஏர்லைன்ஸ் விமானம், நள்ளிரவில் 158 பயணிகளுடன் புறப்பட்டது. விமானம் ஓடு பாதையில் ஓடத் தொடங்கியபோது, திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதோடு விமானம் பறக்க தொடங்கினால் பெரும் ஆபத்து என்பதை உணர்ந்த விமானி, உடனடியாக விமானத்தை நிறுத்தினார். அதோடு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் அவசர தகவல் கொடுத்தார்.

இதையடுத்து இழுவை வாகனம் மூலம் விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். விமானத்தை பழுது பார்க்கும் பணியில் விமானப் பொறியாளர்கள் ஈடுபட்டனர். இயந்திரக் கோளாறை சரி செய்ய தாமதமானதால் விமானம் ரத்து செய்யப்பட்டது. விமான பயணிகள் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். விமானி தகுந்த நேரத்தில் துரிதமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதையும் படிங்க: மதுபோதையில் ரயில்வே தண்டவாளத்தில் உறங்கிய 2 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details