சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விதிகளை பின்பற்றாமல் இறைச்சி விற்பனை செய்த கடைகள் சீல் வைத்து மூடப்பட்டுள்ளன. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலான வீடுகளில் அசைவம் சமைப்பதால் அன்றைய தினம் இறைச்சிக் கடைகள் கூட்டமாக இருக்கும்.
விதிகளை மீறிய இறைச்சிக் கடைகளுக்கு சீல்.! - விதிகளை பின்பற்றாமல் இறைச்சி விற்பனை செய்த கடைகளுக்கு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவுப்படி சீல் வைக்கப்பட்டது
சென்னை: விதிகளை பின்பற்றாமல் இறைச்சி விற்பனை செய்த கடைகளுக்கு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவுப்படி சீல் வைக்கப்பட்டது.
தற்போது கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், இறைச்சிக் கடைகளில் கண்டிப்பாக சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும், அதேபோல மாநகராட்சி இறைச்சிக் கூடங்களில் இருந்து வரும் இறைச்சிகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சி நேற்று உத்தரவிட்டிருந்தது.
இதனை மீறி செயல்படும் இறைச்சிக் கடைகளுக்கு சீல் வைத்து மூன்று மாதங்கள் வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் விதிகளைப் பின்பற்றாமல் செயல்பட்ட ஆடு, கோழி இறைச்சிக் கடைகள் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவுப்படி சீல் வைத்து மூடப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இவை மூன்று மாதங்கள் வரை மூடப்படும்.