மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரிடையே இருநாள் சந்திப்பு நடைபெற்றுவருகிறது. இன்று காலை இருநாட்டுத் தலைவர்கள் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
‘நானும் மோடியும் தோழர்கள் போலப் பேசினோம்’ - சீன அதிபர் ஜின்பிங் - PM Modi Xi Jinping Summit
தானும் பிரதமர் நரேந்திர மோடியும் தோழர்கள் போல மனம் விட்டுப் பேசியதாகச் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
XiJinping
அதைத்தொடர்ந்து நடந்த உயர் மட்ட அலுவலர்கள் குழு பேச்சுவார்த்தையில் பிரதமர் நரேந்திர மோடி, "மதிப்பிற்குரிய விருந்தினரை வரவேற்கிறேன்" என்று தமிழில் தனது உரையைத் தொடக்கினார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், "நேற்று நானும் மோடியும் தோழர்கள் போல் மனம்விட்டு இருநாட்டு உறவுகள் பற்றிப் பேசினோம். இந்தியாவில் எங்களுக்கு அளிக்கப்பட்ட விருந்தோம்பலைக் கண்டு வியப்படைந்தோம். இது எங்களுக்கு மறக்கமுடியாத அனுபவம்" என்று நெகிழ்ந்துள்ளார்.