நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் மூலம் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழ்நாடு எம்.பி.க்கள் ஆறு பேரில் அன்புமணி ராமதாஸை தவிர்த்து ஐந்து பேர் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர்.
மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றார் வைகோ! - Rajya Sabha
டெல்லி: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இறையாண்மையைப் பற்றி நிற்பேன் என தமிழில் கூறி மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார்.
vaiko
டெல்லியில் உள்ள மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். அப்போது 'இறையாண்மையைப் பற்றி நிற்பேன்' என தமிழில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
அவருடன் திமுகவைச் சேர்ந்த வில்சன், சண்முகம், அதிமுகவைச் சேர்ந்த முஹமத் ஜான், சந்திரசேகர் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். பதவி ஏற்றுக் கொண்ட அனைவரும் தமிழிலே உறுதிமொழி எடுத்தது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Jul 25, 2019, 12:12 PM IST