தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'10ஆம் வகுப்பு மாணவர்களை தேர்ச்சிப் பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும்' - வைகோ - வைகோ செய்திகள்

சென்னை: 11,12ஆம் வகுப்புகளில் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளதால், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

vaiko
vaiko

By

Published : Jun 8, 2020, 4:28 PM IST

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தற்போது கரோனா தொற்று பல நூறு மடங்கு உயர்ந்து இருக்கிறது. நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மூன்று மாதங்கள் இடைவெளி ஏற்பட்டு, மீண்டும் முறையான பயிற்சிகள் அளிக்காமல், ஆயத்தப்படுத்தாமல், மாணவர்களைத் தேர்வு எழுதும்படி கட்டாயப்படுத்தக்கூடாது. அது அவர்களின் மனநிலையைக் கடுமையாகப் பாதிக்கும். தங்கள் பிள்ளைகளின் உயிரோடு விளையாட பெற்றோரும் விரும்பவில்லை.

11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளில் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, தமிழ்நாடு அரசு இந்தக் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்து, அனைத்து மாணவர்களையும் தேர்ச்சிப் பெற்றதாக அறிவிக்க வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: குழந்தைகளின் உயிரோடு விளையாடினால், அதற்கு பழனிசாமியே பொறுப்பு - உதயநிதி

ABOUT THE AUTHOR

...view details