தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கலை அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வா? - வைகோ கண்டனம் - நுழைவுத்தேர்வு

சென்னை: மத்திய பாஜக அரசு, கலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தச் செய்யப்பட்டிருக்கும் பரிந்துரையை நிராகரிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

vaiko
vaiko

By

Published : Apr 30, 2020, 3:15 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ அரியானா மத்தியப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆர்.சி.குஹாத் தலைமையிலான, பல்கலைக்கழக மானியக் குழு, கரோனா பேரிடரால் தள்ளி வைக்கப்பட்டுள்ள தேர்வுகளைத் தொடங்குவது குறித்தும், அடுத்த கல்வியாண்டிற்கான பாடங்களைத் தொடங்குவது குறித்தும் ஆராய்ந்து தனது பரிந்துரைகளை அளித்துள்ளது. அப்பரிந்துரைகளில், நீட் நுழைவுத்தேர்வு போன்று, கலை அறிவியல் படிப்புகளுக்கும் தேசிய மற்றும் மாநில அளவில் நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்பதும் இடம்பெற்றுள்ளது.

கலை, அறிவியல் பட்டப் படிப்புகளில் சேரும் கிராமப்புற ஏழை, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை முடக்கிப் போடும் வகையில், நுழைவுத் தேர்வை அறிமுகம் செய்வது அநீதியாகும். மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புகளில் பயில வாய்ப்பற்ற பின்தங்கிய, பட்டியல் இனச் சமூக மாணவர்கள் மற்றும் அனைத்துச் சமூகங்களையும் சார்ந்த மாணவர்கள் கலை, அறிவியல் படிப்புகளைத்தான் நம்பியுள்ளனர். அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் நுழைவுத் தேர்வைப் புகுத்துவது சமூக நீதிக்கு எதிரானது.

எனவே, மத்திய பாஜக அரசு, கலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தச் செய்யப்பட்டு இருக்கும் பரிந்துரையை நிராகரிக்க வேண்டும் ” என்று வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு: இம்மாதத்திற்குள் அறிக்கை தாக்கல்!

ABOUT THE AUTHOR

...view details