தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'மக்களை கரோனா வதைக்கும் போது பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்துவதா?' - வைகோ கண்டனம் - Tamilnadu latest news

சென்னை: பெட்ரோல், டீசல் வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

vaiko
vaiko

By

Published : May 4, 2020, 8:44 PM IST

பெட்ரோல், டீசல் வரி உயர்வை திரும்பப் பெறுவது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. கடந்த மே 1ஆம் தேதி நிலவரப்படி கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 26 டாலராக சரிந்து விட்டது.

இந்நிலையில், மக்களுக்கு அதன் பயன் கிடைக்காத வகையில் மத்திய அரசு கடந்த மார்ச் 14ஆம் தேதி பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியது. இதன் மூலம் மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ 22 .98ம், டீசலுக்கு ரூ 18.83ம் கலால் வரியாக வசூலிக்கிறது. இதுவரை பெட்ரோல், டீசல் கலால் வரியாக மட்டும் ரூபாய் 20 லட்சம் கோடி பாஜக அரசால் வசூலிக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில், மத்திய அரசு போலவே எடப்பாடி பழனிசாமி அரசும் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை உயர்த்தி இருப்பது கண்டனத்துக்குரியது. பெட்ரோலுக்கு மதிப்புக்கூட்டு வரி 28லிருந்து 34 விழுக்காடு ஆகவும், டீசலுக்கு 20லிருந்து 25விழுக்காடு ஆகவும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் பெட்ரோல் விலை 3 ரூபாய் 25 பைசாவும், டீசல் விலை 2 ரூபாய் 50 பைசாவும் உயர்ந்துள்ளது. கரோனா பேரிடர் மக்களை வாட்டி வதைக்கும்போது, தமிழ்நாடு அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றுவது அக்கிரமம். எனவே பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரி உயர்வை அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: சென்னையை ஆக்கிரமிக்கும் கரோனா: தலைநகரே மீண்டு வா!

ABOUT THE AUTHOR

...view details