எம்.டி முதுகலை படிப்பிற்கு 1070 இடங்களும், எம். எஸ் முதுகலை படிப்பிற்கு 658 இடங்களும் உள்ளன. இதில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு அளிக்கப்படும்.
கடந்த 20ஆம் தேதி முதல் எம்.டி, எம்.எஸ். முதுநிலை படிப்பிற்கு மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். அதன்பின் ஆவணங்களை ஜெராக்ஸ் எடுத்து மருத்துவக்கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு 23ம் தேதிக்குள் அனுப்பிவைத்தனர்.