சென்னை:தமிழ்நாட்டில் மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு கலந்தாய்வு இன்று(ஜன.27) தொடங்கியது.
இதில் மாற்றுதிறனாளிகள் பிரிவில் எம்பிபிஎஸ் படிப்பில் 212 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 9 இடங்களும் இருந்தன. இந்நிலையில் விண்ணப்பம் செய்த 73 பேரில் தகுதியான 53 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர்.
அதேபோல் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் 152 விண்ணப்பம் செய்தனர். அவர்களில் எம்பிபிஎஸ் படிப்பில் 7 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் ஒரு இடமும் இருந்தன.
இதற்கு 18 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான ஒதுக்கீட்டு இடத்திற்கு 360 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.