மத்திய மாநில அரசுகளை விமர்சித்தது, நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சித்தது உள்ளிட்ட காரணங்களுக்காக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி திருமுருகன் காந்தி உயர்நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.
திருமுருகன் காந்தி மனுக்கள் தள்ளுபடி; பின்புலத்தை விசாரிக்க உத்தரவு! - மே 17
சென்னை: இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராகவும் அவதூறாகப் பேசிவரும் திருமுருகன் காந்தியின் பின்புலம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருமுருகன் காந்தி
இந்த மனுக்கள் மீதான விசாரணை, இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில், போதுமான ஆதாரங்கள் அடிப்படையிலேயே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்குக்கான முகாந்திரம் இருப்பதால் வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார். மேலும், திருமுருகன் காந்தியின் பின்புலம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவரின் 8 மனுக்களையும் தள்ளுபடி செய்தும் நீதிபதி உத்தரவிட்டார்.