தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில் 5, 6, 7, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணக்குத் திறனறிவு தேர்வு நடத்தப்படுகின்றது. இந்த தேர்வு கோட்டூர்புரத்தில் உள்ள பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் ஜனவரி 5ஆம் தேதி நடத்தப்படவுள்ளது.
இத்தேர்வில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவியர் நுழைவு கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும். இந்த கணிதத் திறனறிவுத் தேர்வு சுமார் 90 நிமிடங்கள் நடைபெறும். சிறந்த மாணவருக்கு முதல் பரிசாக 5 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 2000 ரூபாயும், மூன்றாம் பரிசாக ரூபாய் ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.