தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மக்கள் வரவேற்பில் சென்னை பிர்லா கோளரங்கம்.!

சென்னை: கோட்டூர்புரம் பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் புதிய தொழிநுட்பத்தோடு மேம்படுத்திய பிறகு மக்களின் செல்வாக்கை பெற்று மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Mass crowds at Birla Planet in Chennai
Mass crowds at Birla Planet in Chennai

By

Published : Dec 1, 2019, 7:50 PM IST

பிர்லா கோளரங்கம் 1988ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு கடந்த 30ஆண்டுகாலமாக மக்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த காலகட்டத்தில் சுமார் 60லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் பிர்லா கோளரங்கத்திற்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில் கோளரங்கத்தை புதிய தொழிநுட்பத்துடன் மேம்படுத்த ஒரு ஆண்டு காலம் மூடப்பட்டு கடந்த மாதம் 19 ஆம் தேதி மீண்டும் கோளரங்கம் திறக்கப்பட்டது. இதில் புதிய உயர் தொழில்நுட்பம் கொண்ட புதிய அரைக்கோள விதானத்துடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மேலும் கோளரங்க உள்சுவற்றில் பொருத்தப்படுள்ள 5 உயிர்தொழிநுட்ப (4k) எண்ணிலக்க ஒளிப்பட கருவிகள் மூலம் காட்சிகள் வழங்கும் வண்ணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கோளரங்கத்திற்கு பொதுமக்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.

இது தொடர்பாக பிர்லா கோளரங்கத்தின் நிர்வாக இயக்குனர் சௌந்தர்ராஜப்பெருமாள் பேசுகையில், “தற்போது புதிதாக சிறிது அளவும் இடைவெளி இல்லாமல் டோம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் விண்மீன்களின் நிகழ்நிலை தோற்ற நகர்வு, விண்வெளிப்பயணம், கோள்கள், நெபுலாக்கள், அண்டங்கள் என பார்க்கப்படும் அனைத்து காட்சிகள் மிகவும் தத்துவப்பூர்வமாக இருக்கும்.

மக்கள் வரவேற்பில் சென்னை பிர்லா கோளரங்கம்
மேலும் மாணவர்கள் இதன்முலம் அறிவியலை உற்று கற்றுக்கொள்ள முடிகிறது. பொதுமக்களிடம் இது பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது என தெரிவித்தார். தற்போது தேர்வு நேரம் என்பதால் பொதுமக்கள் வருகை சற்று குறைந்துள்ளது டிசம்பர் இறுதியில் அதிகளவு மக்கள் வருகையை எதிரிபார்க்க முடியும் என தெரிவித்தார்.

தொழில்நுட்ப மேம்பாட்டோடு பிர்லா கோளரங்கத்தில் புதிதாக "கோளத்தில் அறிவியல்" என்னும் கோளவடிவு திரையீடு கருவியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கோளவடிவு திரையீடு கருவி அமெரிக்க தேசிய கடலாய்வு மற்றும் வானியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது ஆகும்.

இந்த திரையீடு கருவியின் மூலம் பூமியை பற்றி அனைத்து மக்களும் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கருவியின் மூலம் எந்த நாட்டின் தற்போதைய வெப்ப நிலை, வானிலை, 1,000 ஆண்டுகளுக்கு முன்னரோ அல்லது 1,000 ஆண்டுகளுக்கு பின்னரோ உள்ள எந்த காலத்து வானத்தையும் துல்லியமாக காணும் வசதி கொண்டவை.

இது தொடர்பாக 'கோலத்தின் அறிவியல்' பொறுப்பாளர் சுடலை பேசுகையில், உலக நாடுகளின் வெப்பநிலை பற்றி இதன் மூலம் எளிதில் தெரிந்துகொள்ளாம். மேலும் ஓசோன் படலத்தை இதன் மூலம் மிகவும் தத்ரூபமாக பார்க்கமுடியும்.

சென்னை பிர்லா கோளரங்க அலுவலர்கள் பேட்டி
ஒரு புகைப்படத்தை பார்த்து மாணவர்கள் தெரிந்த்துக்கொள்வதை விட அறிவியல் மூலம் மிகவும் எளிதில் அனைத்தும் தெரிந்துகொள்ள இயலும். இது மாணவர்கள் மத்தியில் பெரிதும் வரவேப்பை பெற்றுள்ளது” என்றார்.

இதையும் படிங்க: மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் அறிவியல் கண்காட்சி!

ABOUT THE AUTHOR

...view details