திருவொற்றியூர் ராஜாஜி நகரை சேர்ந்தவர் ஏழுமலை என்கின்ற அண்ணாமலை (43) கொத்தனார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் முதல் மாடியில் கட்டட வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அருகே சென்று கொண்டிருந்த மின்சார வயரில் கை பட்டதால் தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
உடனே அப்பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு கவனக்குறைவாக கொத்தனாரை பணியில் அமர்த்திய உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இறந்தவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.