தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சீதாராம் யெச்சூரியை விடுதலை செய்ய வேண்டும்- மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - டி.ராஜா

மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் டி.ராஜா ஆகியோரை கைது செய்ததைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

By

Published : Aug 10, 2019, 6:39 AM IST

ஆகஸ்ட் 5ஆம் தேதி காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து மத்திய அரசால் நீக்கப்பட்டது. இதனை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் டி.ராஜா ஆகியோர் காஷ்மீர் மக்களைச் சந்திக்க விமான நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.

ஆனால், இருவரையும் காஷ்மீர் செல்லவிடாமல் விமான நிலையத்திலே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில், இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்து அவர்கள் இருவரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி திருவண்ணாமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைத்துள்ள தலைவர்களையும், விடுதலை செய்ய வேண்டும் எனவும், சிறப்பு அந்தஸ்தை நீக்கியதைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இதில், மற்றொரு நிகழ்வாகத் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் சீதாராம் யெச்சூரி கைதை கண்டித்தும் சிறப்பு அந்தஸ்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டத்தில் நடத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details