தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

“சின்னமேடு, கூழையாறு கிராமங்களில் கடல் அரிப்புத் தடுப்புப் பணிகள் விரைவில் தொடங்கும்”- அமைச்சர் ஜெயக்குமார் தகவல்! - கடல் அரிப்பு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை

நாகப்பட்டினம் மாவட்டம், சின்னமேடு, கூழையாறு கிராமங்களில் கடல் அரிப்புத் தடுப்புப் பணி நடைபெறவுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Marine erosion prevention work Marine erosion prevention work has started in Chinnamedu and Koozhiyaru Minister D. Jayakumar Marine erosion prevention work statement சின்னமேடு, கூழையாறு கிராமங்களில் கடல் அரிப்புத் தடுப்புப் பணிகள் தொடங்கின கடல் அரிப்பு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை நாகப்பட்டினம் கடல் அரிப்பு பாதிப்பு
Marine erosion prevention work Marine erosion prevention work has started in Chinnamedu and Koozhiyaru Minister D. Jayakumar Marine erosion prevention work statement சின்னமேடு, கூழையாறு கிராமங்களில் கடல் அரிப்புத் தடுப்புப் பணிகள் தொடங்கின கடல் அரிப்பு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை நாகப்பட்டினம் கடல் அரிப்பு பாதிப்பு

By

Published : Oct 14, 2020, 11:18 AM IST

சென்னை: இது தொடர்பாக அவர் புதன்கிழமை (இன்று) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகப்பட்டினம் மாவட்டம், சின்னமேடு, கூழையாறு கிராமங்கள் கடல் அரிப்பினால் மிகவும் பாதிப்படைந்துள்ளன.

இதனால், அங்கு கடல் அரிப்புத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அதேபோல், கொடியம்பாளையம் கிராமத்தில் மீனவ மக்களின் உபயோகத்திற்கு ஏலக்கூடம் மற்றும் வலை பின்னும் கூடம் அமைக்க வேண்டும் என்ற அப்பகுதி மீனவ மக்கள் நீண்ட நாள்களாக வலியுறுத்தி வந்தனர்.

இதனடிப்படையில், சின்னமேடு கிராமத்தில் 9.78 கோடி ரூபாய் செலவிலும், கூழையாறு கிராமத்தில் 6.83 கோடி ரூபாய் செலவிலும் கடல் அரிப்புத் தடுப்புப் பணி மேற்கொள்ளப்படும் எனவும், கொடியம்பாளையம் கிராமத்தில் 2.85 கோடி ரூபாய் செலவில் மீன் ஏலக்கூடம் மற்றும் வலைப்பின்னும் கூடம் அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவித்திருந்தார்.

தற்போது, தமிழ்நாடு அரசால் இப்பணிகளுக்கான நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கும் நிலையில் உள்ளன. இந்தப் பணிகள் நிறைவேற்றப்படுவதால் சின்னமேடு, கூழையாறு ஆகிய கடலோர கிராமங்கள் கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்கப்படும்.

கொடியம்பாளையம் கிராமத்தில் மீன் ஏலக்கூடம் மற்றும் வலை பின்னும் கூடம் கட்டப்படுவதால் அந்தக் கிராம மீனவர்கள் பெரிதும் பயனடைவர்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நாகூர் அருகே தொடரும் கடல் அரிப்பு - தடுப்புச்சுவர் அமைத்துத் தருமா அரசு?

ABOUT THE AUTHOR

...view details