மெரினா கடற்கரையை அழகுபடுத்துதல், புதிய மீன் அங்காடி, நடைபாதை, நடை மேம்பாலம் உள்ளிட்டவை அமைத்தல் தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான வினித் கோத்தாரி தலைமையிலான அமர்வில் கடந்த ஓராண்டாக நடைபெற்றுவருகிறது.
குறிப்பாக, மெரினா கடற்கரை தொடர்பாக எந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டாலும் அவற்றை வேறு அமர்வு விசாரிக்க கூடாது என்றும் அவற்றை தனது தலைமையிலான அமர்வு தான் விசாரிக்கும் என்றும் உத்தரவை பிறப்பித்திருந்த மூத்த நீதிபதி வினித் கோத்தாரி தொடக்கம் முதல் இந்த வழக்கில் ஆர்வம் காட்டி வந்தார்.
மெரினா கடற்கரையில் ஏற்கெனவே இருந்த கடைகளுக்கு மாற்றாக புதிய தள்ளு வண்டி கடைகளுக்கான டெண்டர் விட உத்தரவிட்டது, சாந்தோம் - பெசன்ட் நகர் இடையே போக்குவரத்து நெரிசலை குறைக்க பாலம் கட்டுவது போன்ற பணிகளுக்கான சாத்தியக் கூறிகளை ஆராய்வது குழு அமைத்தது என
கலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் வரையிலான லூப் சாலையை உலக தரத்திற்கு உயர்ந்த தேவையானப் பணிகளை துரிதப்படுத்த தொடர்ச்சியான அறிவுறுத்தல்களை நீதிபதி வினித் கோத்தாரி வழங்கி வந்தார்.
உச்ச நீதிமன்ற கொலீஜியம் நீதிபதி வினித் கோத்தாரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து குஜராத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மெரினா தொடர்பான வழக்கு இன்று (டிச.22) மீண்டும் நீதிபதி வினித் கோத்தாரி அடங்கிய அமர்வின் முன்பாக விசாரணைக்கு வந்தது.
மெரினா கடற்கரை தூய்மைப்படுத்தல் : மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு! அப்போது நீதிபதி வினித் கோத்தாரி, “ மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்துவது தொடர்பாக கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்றுவரும் இவ்வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைப்பு நல்கிய சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை மாநகர காவல் ஆணையர், தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் எஸ்.ஆர் ராஜகோபால், மத்திய - மாநில அரசின் வழக்குரைஞர்கள், அலுவலர்கள், மனுதாரர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறி தனது இடமாற்ற பரிந்துரையைக் கருத்தில் கொண்டு வழக்கின் மேலதிக விசாரணையை ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க :கொடைக்கானல் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை!