தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

செஸ் ஒலிம்பியாட்: ஒத்திகை போட்டியில் 1,414 வீரர்கள் பங்கேற்பு - அமைச்சர் மெய்யநாதன்

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு இன்று (ஜுலை.24) நடத்தப்பட்ட ஒத்திகை போட்டியில் 1,414 வீரர்கள் கலந்து கொண்டனர்.

ஒலிம்பியாட் போட்டியின் ஒத்திகை போட்டியில் 1414 செஸ் வீரர்கள் பங்கேற்பு
ஒலிம்பியாட் போட்டியின் ஒத்திகை போட்டியில் 1414 செஸ் வீரர்கள் பங்கேற்பு

By

Published : Jul 24, 2022, 9:19 PM IST

சென்னை:44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஒத்திகை போட்டியில் 1,414 செஸ் வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் பயிற்சி ஆட்டத்தை அமைச்சர்கள் மெய்யநாதன், தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தனர்.

பின்னர் பேட்டியளித்த அமைச்சர் மெய்யநாதன், 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஒத்திகை போட்டி இன்றைய (ஜூலை.24) தினம் வெற்றிகரமாக தொடங்கப்பட்டுள்ளது.

ஒலிம்பியாட் போட்டியின் ஒத்திகை போட்டியில் 1414 செஸ் வீரர்கள் பங்கேற்பு

1,414 செஸ் வீரர்கள் இன்றைய பயிற்சி போட்டியில் பங்கேற்று உள்ளனர். செஸ் போர்டுகள் ஆன்லைனில் இணைக்கப்பட்டு பயிற்சி போட்டி தொடங்கப்பட்டுள்ளது. நான்கு வருடம் செய்ய வேண்டிய ஏற்பாடுகளை 4 மாதத்தில் செய்து முடித்து 100% பணிகள் நிறைவடைந்து போட்டி தொடங்க இருப்பது மகிழ்ச்சியான நிகழ்வு.

இன்றைய பயிற்சி ஆட்டம் இரவு 8 மணி வரை நடைபெறும். ஒரே நேரத்தில் 707 செஸ் போர்டுகள் இணையதள வசதிகளுடன் நடத்தும் போட்டி என்பதால் நோபல் ரெக்கார்ட் போட்டியாக இன்றைய போட்டி அமைந்துள்ளது.

ஒலிம்பியாட் போட்டியின் ஒத்திகை போட்டியில் 1414 செஸ் வீரர்கள் பங்கேற்பு

இந்தியாவின் குக் கிராம வரை செஸ் விளையாட்டின் பெருமையை தமிழ்நாடு முதலமைச்சர் மீண்டும் கொண்டு சேர்த்துள்ளார். இது இந்தியாவுக்கு கிடைத்த பெருமை செஸ் ஒலிம்பியாட் ஃபீவர் தொடங்கிவிட்டது.

இளைஞர் சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் வகையில் செஸ் ஒலிம்பியாட் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. எதிர்காலத்தில் எல்லோரடைய இல்லத்திலும் செஸ் போர்டுகள் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க:தூத்துக்குடியில் பிரம்மாண்ட சதுரங்க விழிப்புணர்வு

ABOUT THE AUTHOR

...view details