தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

Chennai Rains: சென்னையின் மழைநீர் வடிகால் கட்டமைப்பின் வரைபடம் மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றம் - சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் (Chennai Corporation) முதல்முறையாக, மழைநீர் வடிகால் கட்டமைப்பின் வரைபடம் மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Map of Chennai Rainwater Drainage Structure uploaded on Corporation website
Map of Chennai Rainwater Drainage Structure uploaded on Corporation website

By

Published : Nov 21, 2021, 5:07 PM IST

சென்னை:சென்னை மாநகராட்சிக்குட்பட்டு 15 மண்டலங்கள் , 200 வார்டுகள் நிர்வாக வசதிகளுக்காக பிரிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் இன்னும் சில பகுதிகளில் மழைநீர் வடிகால் கட்டமைப்பு ஏற்படுத்தப்படாமல் உள்ளது. அண்மையில் பெய்த கனமழை காரணமாக, மழைநீர் வடிகால் கட்டமைப்பு இல்லாத பகுதிகளிலும், மழைநீர் வடிகால் கட்டமைப்பு இருந்தும் முறையாகப் பராமரிக்காத இடங்களிலும் மழைநீர் தேங்கிப் பாதிப்பை ஏற்படுத்தியது.

மழைநீர் வடிகாலை கண்டறிய வேண்டுமா?

சென்னையில் எங்கு எல்லாம் மழைநீர் வடிகால் உள்ளது மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கப்படவில்லை என்பதை அனைத்துத் தரப்பினரும் அறிந்துகொள்ளும் வகையில், சென்னை மாநகராட்சியின்(Chennai Corporation) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மழைநீர் வடிகால் கட்டமைப்பு குறித்த வரைபடங்களை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக 2 மண்டலங்கள் தவிர்த்து 11 மண்டலங்களில் உள்ள மழைநீர் வடிகால்கள் குறித்த வரைபடங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் மழைநீர் கட்டமைப்பைப் பொதுமக்கள் எளிதாகத் தெரிந்துகொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மழை நீர் வடிகால் வரைபடத்தின் பயன் என்ன?

ஒரு மண்டலத்திலிருந்து வேறு மண்டலத்திற்குப் பணி மாறுதலாகி, வரும் அலுவலர்களும் மழைநீர் வடிகால் வரைபடங்களை எளிதாகத் தெரிந்துகொள்ளலாம்.

மழைநீர் வடிகால் கட்டமைப்பின் வரைபடம் குறித்து தேட உதவும் மென்பொருள் பயன்பாடு

மேலும் பொதுமக்களோடு அலுவலர்கள் இணைந்து மழைநீர் வடிகால்களை புதிதாக ஏற்படுத்தவும், இந்த வரைபடங்கள் உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுகுறித்தான லிங்க்: https://chennaicorporation.gov.in/gcc/swd_net_maps/?s=08

முன்னதாக மாநகராட்சியில் நடைபெறும் பணிகள் குறித்து வெளிப்படையாக மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட நிலையில், மழைநீர் வடிகால்கள் வரைபடமும் பதிவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மதுரை அம்மா உணவகத்தில் கருணாநிதி படம் அகற்றம்!

ABOUT THE AUTHOR

...view details