தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

"மன்மத லீலை" முதல் காட்சி ரத்து - ரசிகர்கள் ஏமாற்றம் - "மன்மத லீலை" முதல் காட்சி ரத்து

அசோக் செல்வன் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள "மன்மத லீலை" திரைப்படத்தின் முதல் காட்சி ரத்து செய்யப்பட்டதால், ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

"மன்மத லீலை" முதல் காட்சி ரத்து - ரசிகர்கள் ஏமாற்றம்
"மன்மத லீலை" முதல் காட்சி ரத்து - ரசிகர்கள் ஏமாற்றம்

By

Published : Apr 1, 2022, 12:00 PM IST

"மாநாடு" திரைப்படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கியுள்ள அடுத்த திரைப்படம் "மன்மத லீலை". இப்படத்தில் அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்ருதி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிரேம்ஜி இசையமைத்துள்ளார். கல்யாணத்திற்கு பிந்தைய காதலை மையப்படுத்தியே கதைக்களம் இருக்கும் என இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார்.

இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பெரும்பாலான திரையரங்குகளில் முதல் காட்சி ரத்து செய்யப்பட்டது. தொழில்நுட்ப பிரச்சினை காரணமாகவே முதல் காட்சி ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, பிரச்சினைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டதாகவும், மதியம் முதல் காட்சிகள் திரையிடப்படவுள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனமான ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட் தெரிவித்துள்ளது. படத்தின் முதல் காட்சி ரத்து செய்யப்பட்டதால், திரையரங்குகளுக்கு சென்ற ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதையும் படிங்க : 'மன்மத லீலை' படத்திற்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

ABOUT THE AUTHOR

...view details