சென்னையை அடுத்த தாம்பரத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் தேசியக் கொடியுடன் பேரணியாகச் சென்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, ”நாடாளுமன்றத்தில் குடியுரிமைத் திருத்த மசோதாவை ஆதரித்த ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆகியோர் தங்கள் மாநிலங்களில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என அறிவித்துவிட்டனர். மேற்கு வங்க, கேரள முதல்வர்களும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை தங்கள் மாநிலத்தில் நடத்த மாட்டோம் என அறிவித்துள்ளனர்.