தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பிணை மனு தள்ளுபடி - MINISTER MANIKANDAM BAIL DISMISSED

முன்னாள் அமைச்சர் மணிகண்டன்
முன்னாள் அமைச்சர் மணிகண்டன்

By

Published : Jun 25, 2021, 3:54 PM IST

Updated : Jun 25, 2021, 5:57 PM IST

15:49 June 25

திரைப்பட நடிகை அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனின் பிணை மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை:அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திரைப்பட நடிகை அளித்த புகாரில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து,பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை ஜூன் 20ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர்.

அமைச்சரின் பிணை மனு

இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், 'பணம் பறிக்கும் நோக்கில் இந்த புகார் அளிக்கபட்டுள்ளது.

புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை. எனவே தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும். இதற்கு நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தான் தயாராக உள்ளேன்' என தனது ஜாமீன் மனுவில் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

காவல்துறை வாதம்

இந்த மனு நேற்று (ஜுன் 24) நீதிபதி செல்வகுமார் முன் விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இன்னும் விசாரணை முழுமையாக முடிவடையவில்லை. மணிகண்டன் அமைச்சராக இருந்தபோது புகார் அளித்த பெண்ணுடன் ஒன்றாக தங்கியிருந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், புகார் அளித்த பெண்ணை மணிகண்டன் மிரட்டியுள்ளார். புகார் அளித்த பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை மனுதார் மணிகண்டன் சம்மந்தபட்ட பெண்ணுக்கு வாட்ஸ்-அப் செயலி மூலம் அனுப்பியுள்ளார். 

இது சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கருத வேண்டும். மேலும் மணிகண்டனை காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது" என வாதிட்டார்.

மணிகண்டன் தரப்பு வாதம்

மனுதார் மணிகண்டன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை. அனைத்தும் பணம் பறிக்கும் நோக்கில் உள்ளது. மனுதரார் ஒரு மருத்துவர், முன்னாள் அமைச்சர். இந்த வழக்கில் ஜாமீன் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கின்ற நிபந்தனைகளை ஏற்க தயாராக உள்ளார். எனவே ஜாமீன் வழங்க வேண்டும்" என வாதிட்டார்.

நேற்று தள்ளிவைப்பு; இன்று தள்ளுபடி

அதேபோல, புகார்தாரரான நடிகை தரப்பில், மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்க கடுமையாக ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு நீதிபதி செல்வக்குமார், ஜாமீன் மனு மீதான உத்தரவை நேற்றைய தினம் தள்ளிவைத்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று (ஜுன் 25) உத்தரவிட்ட நீதிபதி செல்வக்குமார், "விசாரணை இன்னும் முடிவடையவில்லை. எனவே தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க முடியாது" எனக்கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு ஜூலை 31 வெளியீடு!

Last Updated : Jun 25, 2021, 5:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details