ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கான தொழில் மேலாண்மைப் பயிற்சிகள் குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: ”ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் 2021-2022ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
"ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தொழில் முனைவு ஏற்படுத்தி தரும் வகையில் கடன் பெற 5,000 தொழில் முனைவோர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு மாவட்ட அளவில் ஏழு நாள்கள் தொழில் மேலாண்மை பயிற்சிகள் தகுதியான நிறுவனங்கள் மூலம் இரண்டு கோடி ரூபாய் செலவில் அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.