சென்னை: சர்வதேச விமான நிலையத்திற்கு எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் அடிஸ் அபாபா நகரில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்து தரையிறங்கியது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது தாண்சானியா நாட்டைச்சேர்ந்த ஜோசப் பேட்டரிக் (37) என்ற பயணி சுற்றுலாப் பயணிகள் விசாவில் உகாண்டாவில் இருந்து இந்த விமானத்தில் சென்னை வந்திருந்தார். அந்த தாண்சானியா நாட்டு பயணி ஜோசப் பேட்ரிக் மீது சுங்கு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.
இதையடுத்து அவருடைய உடமைகளை முழுமையாக சோதனை செய்தனர். உடைமைகளில் எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராமல் அந்தப் பயணியை சென்னை விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, எக்ஸ்ரே எடுத்து பரிசோதித்தனர். அப்போது அவருடைய வயிற்றுக்குள் கேப்சுல்கள் பல விழுங்கி வந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து உடனடியாக ஜோசப் பேட்ரிக்கை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு இனிமா கொடுத்து, வயிற்றில் உள்ள கேப்சுல்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றினர். அவருடைய வயிற்றிலிருந்து மொத்தம் 86 கேப்சுல்கள் வெளியே வந்தன.