தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மனைவியைக் கொலை செய்த கணவர் குண்டர் சட்டத்தில் கைது! - மனைவியைக் கொலை செய்த கணவர்

அரியலூர்: மனைவியைக் கொலை செய்த வழக்கில் கணவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Murder
Murder

By

Published : Oct 30, 2020, 1:28 AM IST

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மருங்கூர் கிராமத்தில் வசித்து வந்தவர் இளம்பருதி. இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், தனது மகனை பார்ப்பதற்காக மனைவி வீட்டிற்கு இளம்பருதி சென்றபோது மனைவிக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது சண்டையாக மாற, ஆத்திரத்தில் இளம்பருதி தனது மனைவியை தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த குவாகம் காவல்துறையினர் இளம்பருதியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா, இளம்பருதியை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்

இதையடுத்து, காவல்துறையினர், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து, திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைப்பதற்கான ஆணையை வழங்கினர்.

ABOUT THE AUTHOR

...view details