தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கடன் தொல்லையால் வங்கி முன் தற்கொலை - கடன் தொல்லையால்

கோவை: கடனை திருப்பி செலுத்த கால அவகாசம் அள்ளிக்காததால் வங்கி முன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்ட வாடிக்கையாளரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடன் தொல்லையால் தற்கொலை!

By

Published : Aug 2, 2019, 4:53 AM IST

Updated : Aug 2, 2019, 6:36 AM IST

சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்தவர் பூபதி. இவரும் இவரது நண்பர்களும் சேர்ந்து பால் பண்ணை நடத்தி வந்துள்ளனர். பின்னர் பால்பண்ணை விரிவாக்கத்திற்காக பூபதி தனது நிலத்தை வைத்து கோவை வெரைட்டிஹால் பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் ரூபாய் 2 கோடிக்கு மேல் கடன் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் கடனை சரியாக கட்டாததால், வட்டியுடம் சேர்த்து 2 கோடியே 40 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் என வங்கி அலுவலர்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர்.

மேலும், ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குள் பணம் கட்டவில்லை என்றால் அடமானம் வைத்த நிலத்தை வங்கி எடுத்துக்கொள்ளும் எனவும் எச்சரித்துள்ளனர்.

இதனையடுத்து, வெரைட்டிஹாலில் உள்ள வங்கிக்கு சென்ற பூபதி, கடனை திருப்பிக்கட்ட கால அவகாசம் கேட்டுள்ளார். அதற்கு வங்கி அலுவலர்கள் மறுத்ததால் மனமுடைந்த அவர், வங்கியின் வாசலிலே பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

கடன் தொல்லையால் தற்கொலை!

இதனையடுத்து அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது.

Last Updated : Aug 2, 2019, 6:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details