சென்னை:தாம்பரம் திருநீர்மலை ரோடு அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (48). இவர் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. இதனால் சுரேஷ்க்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று (ஏப்.11) மாலை குடிபோதையில் வீட்டிற்கு சென்ற சுரேஷ் அவரது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தகராறு முற்றிய நிலையில் ஆத்திரத்தில் சுரேஷ் தனக்கு தானே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து நடுரோட்டில் ஓடியுள்ளார்.
லாரி ஓட்டுநர் தீக்குளிப்பு பின்னர் பலத்த தீக்காயத்துடன் உயிருக்கு போராடிய சுரேஷை மீட்ட அக்கம்பக்கத்தினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக தாம்பரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி ஓட்டுநர் சுரேஷ் தனக்கு தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு சாலையில் ஓடிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:பைக் மீது கார் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகாயம்