சென்னை சூளை பகுதியில் முருகன் தெருவை சேரந்தவர் ரவிகுமார் (60). இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். 28 வயதுடைய இவரது இளைய மகள் தி.நகர் பஜனை கோயில் தெருவை சேர்ந்த திலீப்குமார் (28) என்பவரை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் இருவீட்டாருக்கும் தெரிந்ததால் திருமணம் செய்ய வேண்டி பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பெண்ணை திருமணம் செய்துகொள்ள திலீப்குமாரும் அவரது குடும்பத்தினரும் அதிக வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் கேட்ட வரதட்சணையை முருகன் குடும்பத்தாரால் கொடுக்க முடியாததால், முருகன் தனது மகளை பெங்களூரை சேர்ந்த சிவபிரசாத் என்பவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொடுத்துள்ளார். திருமணத்திற்கு பின்னர் முருகனின் மகள் பெங்களூரில் வசித்து வருகின்றார்.