சென்னை: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரை சேர்ந்தவர்கள் பிரகாஷ்(42), காயத்ரி(39) தம்பதி. இவர்களுக்கு நித்யஸ்ரீ(13), மகன் ஹரி கிருஷ்ணன்(8) என இரண்டு குழந்தைகள் உள்ளன. பிரகாஷ் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். காயத்ரி நாட்டு மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார்.
கடந்த சில மாதங்களாக பிரகாஷுக்கு கடன் அதிகமாக இருந்துள்ளது. இதனால் அடிக்கடி அவருக்கு மனைவியுடன் சச்சரவு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றிரவு (மே 27) மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது பிரகாஷ் தனது இரண்டு குழந்தைகளையும், மனைவியையும் மரம் அறுக்கும் ரம்பத்தால், அவர்களின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.