தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இருசக்கர வாகனங்கள் திருட்டு: ஒருவர் கைது - Bike, cellphone theft in vannarapattai

சென்னை: வண்ணாரப்பேட்டையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு இருசக்கர வாகனங்கள், மொபைல்போன்கள், தங்க நகை திருடியவரை காவலர்கள் கைதுசெய்தனர்.

thief
thief

By

Published : Sep 16, 2020, 2:27 PM IST

சென்னை வண்ணாரப்பேட்டை, நரசய்யர் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (48). கடந்த 17ஆம் தேதி இவரது வீட்டு வாசலில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம் திருடுபோனது.

அதேபோல் ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்தவர் அலி ஆபிரகாம் (22). இவர், கடந்த 9ஆம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தன் தந்தையை பார்க்க வந்தபோது தன் இருசக்கர வாகனத்தை வெளியே நிறுத்திருந்தார். திரும்பி வந்து பார்க்கையில் அந்த வாகனம் திருடுபோனது.

இரு சக்கர வாகனம்

இந்நிலையில் நேற்றிரவு பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் ரிஸ்வானா என்பவர் வீட்டின் கதவைத் திறந்துவைத்து தூங்கியபோது வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர், அங்கிருந்த விலை உயர்ந்த செல்போன்கள், தங்க கம்மல், ஹேண்ட் பேக் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட திருட்டு பொருள்கள்

இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர் மதுரையைச் சேர்ந்த வீரப்பெருமாள் என்பது தெரியவந்தது.

இவர் இரு இடங்களில் பைக், வண்ணாரப்பேட்டை, ஏழுகிணறு பகுதியில் ஆறு மொபைல்போன்கள், தங்க கம்மல் திருடியது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் அவரை கைதுசெய்து புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details