சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த மணிகண்ட பிரசாத் என்பவர், மெரினாவில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு வந்து தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் இல்லை என்றால் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சமாதியை பெட்ரோல் குண்டு வீசி தகர்ப்பேன், அவ்வாறு ஈடுபடும் என் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று நேற்று (பிப். 09) மனு கொடுக்க 1.40 மணிக்கு வந்துள்ளார்.
இதையடுத்து அவரை காவல் துறையினர் கைதுசெய்து மெரினா காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணையில் ஈடுபட்டனர். பிறகு இரவு 8.15 மணிக்கு திருவல்லிக்கேணியில் உள்ள லாக் நகர் காப்பகத்திற்கு காவல் துறையினர் அனுப்பிவைத்துள்ளனர்.
’ஜெயலலிதா நினைவிடம் மீது பெட்ரோல் குண்டு வீசுவேன்’ - மனு கொடுக்க வந்த நபர் - ஜெயலலிதா நினைவிடம்
சென்னை: மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தை பெட்ரோல் குண்டு வீசி தகர்க்கப்போவதாக டிஜிபி அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயலலிதா நினைவிடம்