சென்னை எழும்பூர், ருக்மணி லஷ்மிபதி சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் சிலர் தங்கி, பெயின்டிங் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இதே போல் வேலை முடித்து விட்டு உறங்கி உள்ளனர். பின்னர் காலையில் விழித்துப் பார்த்தபோது அவர்களின் 6 செல்போன்கள் காணாமல் போய் உள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வடமாநிலத் தொழிலாளர்கள், உடனே எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், வடமாநிலத் தொழிலாளர்களின் செல்போன்களைத் திருடியவர் பரங்கிமலையைச் சேர்ந்த வினோத் அலெக்சாண்டர் என்கிற குதிரை சிவா என்பது தெரியவந்தது.