தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மத்திய ரயில் நிலையத்தில் செல்ஃபோன் திருடியவர் கைது! - செல்ஃபோன் திருடன்

சென்னை: மத்திய ரயில் நிலையத்தில் பயணிகளின் செல்ஃபோன்களை திருடிச் செல்லும் நபரை ரயில்வே காவல் துறையினர் கைது செய்தனர்.

Man arrested for stealed cellphones at chennai central

By

Published : Nov 14, 2019, 6:59 PM IST

சென்னை டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையத்தில் பயணிகளின் செல்ஃபோன்கள் திருடுபோவதாக, ரயில்வே காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனால் அவர்கள் தனிப்படை அமைத்து ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், ரயில் நிலையத்தில் உள்ள ஆட்டோ பூத் அருகே சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த ஒரு நபரைப் பிடித்து காவல் துறையினர் விசாரித்ததில், அவர் சூளைமேடு பகுதியைச் சேர்ந்த செட்டியார்(32) என்பதும், சார்ஜரிலுள்ள பயணிகளின் செல்ஃபோன்களை திருடிச் செல்வதும் தெரியவந்தது.

அவரிடமிருந்து ஐந்து செல்ஃபோன்களையும் பறிமுதல் செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அவரை அடைத்தனர்.

இதையும் படிங்க: பெயிண்ட் கடையில் ஐம்பதாயிரம் கொள்ளை - சிசிடிவி காட்சி

ABOUT THE AUTHOR

...view details