சென்னைபல்லாவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜீவா நகர்ப்பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக ரகசியத்தகவல் கிடைத்தது. அத்தகவல் அடிப்படையில், காவல்துறையினர் ஜீவா நகர்ப்பகுதி முழுவதும் கண்காணித்தனர்.
இந்தநிலையில் ஜீவா நகர்ப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு நபரை சோதனை செய்தபோது போதை மாத்திரை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து பல்லாவரம் காவல் நிலையம் அழைத்துச்சென்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் ஜீவா நகர்ப் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(24) என்பதும், வெல்டிங் வேலை செய்து வருபவர் எனவும் தெரியவந்தது.